Sunday, October 23, 2011

ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளே!

ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளே!

அல்லாஹ் உங்களது ஹஜ் கிரியையை ஏற்றுக்கொண்டு உங்களை அன்று பிறந்த பாலகன் போல் எந்த பாவமும் செய்யாதவர்களைப் போல் ஆக்கிவிடுவானாக!
இஸ்லாத்தில் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் 3 பள்ளிவாயல்களுக்கு பயணியுங்கள் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. அவை
1. மஸ்ஜிதுல் ஹராம்
2. மஸ்ஜிதுன் நபவி
3 .மஸ்ஜிதுல் அக்சா

இவற்றில் மஸ்ஜிதுல் ஹராத்தில் (சனத்தொகை அதிகரிப்பு காரணமாக) நுழையவே முடியாது, மேலும் மஸ்ஜிதுல் அக்சாவுக்குப் போனால் அங்கே இஸ்ரேலியர்களின் கொடுமை.
எனவே எம்மால் நன்மை தேடி செல்ல எஞ்சியிருப்பது மஸ்ஜிதுன் நபவி மாத்திரமே. அதிலும் நாம் அனேகமாக மக்கா, மதீனாவுக்கு செல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைப்பது ஹஜ்ஜுடைய காலப்பகுதியிலேயே. ஹஜ்ஜு செய்துவிட்டு திரும்பும் போது ஹஜ்ஜுடைய நன்மையுடன் நம் ஊரில் தொழும் தொழுகையை விட 1000 , 100 000 மடங்கு நன்மையையும் பெற்றுக்கொண்டு வர எத்தணிக்காதவன் உண்மையாக துர்பாக்கியசாலியே. கஃபாவில் தொழ முடியாத உங்களுக்கு உள்ள ஒரே இடம் மஸ்ஜிதுன் நபவியாகும்.

எனவே ஹஜ்ஜு செய்துவிட்டு திரும்பும் போது தவறாமல் மஸ்ஜிதுன் நபவிக்கு சென்று தொழுது அதிக நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்! மேலும் அங்கே உள்ள நம் (முஃமின்களின்) உயிரிலும் மேலான ரஸூல் (ஸல்) அவர்களின் கப்ரையும் ஜியாரத்து செய்யாமல் திரும்ப வேண்டாம். (அல்லாஹ்வும் ரசூலும் எந்த சந்தர்ப்பத்திலும் மஹ்ஷர் பெருவெளியிலும் இணை வைப்பதை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்க நாளை மறுமையில் நாம் யாநப்சீ யாநப்சீ யா ரசூலுல்லாஹ் எங்களை காப்பாற்றுங்கள் என்றே கூக்குரலிடுவோம். அதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஏற்று நமக்கு உதவி புரிவார்கள்.) அப்படிப்பட்ட நாயகத்தை தரிசிக்காமல் வீடு திரும்புபவனை விட ஒரு துர்ப்பாக்கியசாலி எந்த ஆலத்திலும் (உலகத்திலும்) இல்லை!
அப்படிப்பட்டவன் சொர்க்கத்தையே கண்முன்னே காட்டியும் புறக்கணித்தவன் போலாவான்.

என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது – ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)

ஹாஜிகளே! ஹஜ்ஜை முடித்துவிட்டோ அல்லது அதற்கு முன்போ ரசூலுல்லாஹ்வை தரிசியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக (அருள் என்பதே ரசூலுல்லாஹ்வை அன்றி ஏது? 21 :107 )

=================================================
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள்:

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட நன்மையுடையதாகும்.

(அறிவிப்பவர் : அபுஹுரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் நூறு தொழுகையைத் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சுபைர் – ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது அது தவிர உள்ள பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னுமாஜா)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது – ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)

பிழைகள் இருப்பின் cmnt பண்ணவும்! — Abdul Basit மற்றும் 10 others பேர்களுடன்
பிடித்திருக்கிறது · · சனிக்கிழமை, 17:58 க்கு ·
Mohammad Illiyas, Hasan Kalifa மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.

Sufi Path ரஸூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
“யார் என்னுடைய கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் கட்டாயம் கிடைக்கும்.”

(தாரகுத்னி)
23 மணி நேரம் முன்பு · பிடித்திருக்கிறது · 2 பேர்

Sufi Path ரஸூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
'யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’

(தாரகுத்னி)

Friday, October 21, 2011

அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,


அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,

அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)..

அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,

பேரூராட்சி மன்ற தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற N.S.M.பஷீர் அகமது B.A,B,L.,
ஆகிய எனக்கும் கவுன்சிலர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட 15 வார்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த மதுக்கூர் சகோதரர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
மதுக்கூரில் உள்ள தாங்கள் குடும்பத்தாரையும், உறவினர்களையும், நண்பர்களையும் எங்களுக்கு வாக்களிக்கச்செய்த வெளிநாட்டில் வசித்துவரும் நமதூர் சகோதரர்களுக்கு நன்றி.
எங்கள் வெற்றிக்காக தங்களது கடுமையான வேலைப்பணிக்கிடையிலும் சொந்த முயற்சியில் இ-மெயில் மூலமும்,தொலைபேசி மூலமும் U.A.E. ல் ஆதரவு திரட்டிய சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
கடந்த 5 ஆண்டுகாலமாக செய்த நலத்திட்டப்பணிகளுக்கும், எங்களின் செயல்பாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றியை எடுத்துக்கொண்டு, நீங்கள் அனைவரும் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் விதத்தில் எங்களின் சீரிய செயல்பாட்டையும்,நேர்மையான -ஆடம்பரமற்ற சமுதாய பணியையும் தொடர்வோம் என உறுதிகூறுகிறேன்.
எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான ஆலோசனைகளையும்,குறைகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டியும் சகோதரர்கள் அனைவரும் இந்த இ-மெயில் மூலமாகவோ, எனது
மொபைல் மூலமாகவோ என்னை எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்..
எனது வேண்டுகோள் கடிதத்தை உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பியது போல், இக்கடிதத்தையும் சகோதரர்கள் அனைவருக்கும் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

N.S.M.பஷீர் அகமது B.A,B,L.
பேரூராட்சி மன்ற தலைவர்.
தி.மு,க தேர்தல் பணிக்குழு.
மதுக்கூர் பேரூர்.
மொபைல் எண் :             0091-98651 40263      
nsm.basheer@yahoo.com

Sunday, June 5, 2011

தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்.(சவூதி "நிடாகத்" திட்டம்,)

அஸ்ஸலாமு அலைக்கும்

கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! - "நிடாகத்"... வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு..



சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க  வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு "இடி" விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்! தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.

(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசு நிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றி செயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாக சவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும் பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின் உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள் சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்று மட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப் பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்கு முன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு.. 

ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை. கடுமையான, உடல் மற்றும் மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர் என்பதே ஆரோக்கியமான உண்மை!இருப்பினும் இவர்களின் சதவிகிதம் குறைவு என  உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார் துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா.... எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் தருகின்றனர். (ஒரே பணியினை ஒரு இந்தியரையும், மேற்கத்தியரையும் அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரை அதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின் நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.) 
  
மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள் உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்) மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி  விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர். 



தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும் இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன் ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன் நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும் இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.

என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?

ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை"  என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்.. 

'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.

'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள். 

'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.

சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம் மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர்.  நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில்  வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது.  "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை.  

இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது.  இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர்  அமைச்சகம் தயாராக உள்ளது. 

'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு  என அனைத்தையும் செயற்படுத்த இயலும். 

இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லதுமஞ்சள்"  நிற அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில்  சேர இயலும்.  இதுவளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம் 


ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்றிருந்தாலும் நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?"எனும் உண்மையினை உணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப் பாதிக்க வாய்ப்பில்லை.  மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறு பிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையே இந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சி வெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!

குறிப்பு: இவர்கள் நினைப்பது போல் அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்க இயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும் உண்மை இவர்களுக்கும் தெரியும்!

Wednesday, May 18, 2011

இப்ப ஏண்டா ஒட்டு போட்டோம்னு தோணுதா


இதன் மூலம் தமிழக மக்களுக்கு அறிவிப்பது என்னவெனில் தமிழகத்தில் கீழ்க்கண்ட பொருட்கள் தடை செய்யப்பட உள்ளன....
ஆட்டு இறைச்சி, ஆட்டுக்கால் சூப், ஆட்டு தோல், வயலுக்கு தெளிக்கும் ஆட்டு உரம், மிக்சி மற்றும் அதன் உதிரி பாகங்கள், மடிக்கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள், அரிசி, அரிசி மாவு, கதர் வேஷ்டி, கதர் துண்டு, மற்றும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் அனைத்தும் அல்லது அதனை சார்ந்துள்ள அனைத்தும் இதில் அடங்கும்
மேற்கூறிய அனைத்தும் தமிழக அரசினால் விற்பனைக்கு தடை செயப்பட்டுள்ளது... இனி நாள் முதற்கொண்டு மேற்குறிய அணைத்து பொருள்களையும் யாரேனும் விற்ககூடாது.... உங்களுக்கு தேவை என்றால் JJ என்ற முத்திரை பதித்த கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்...
இலவசமா தருகின்றோம் என்று சொன்னபோது இனிச்சது தானே.... கொய்யால இதை நீ விக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்

சும்மா ஒரு கற்பனை

Wednesday, May 11, 2011

பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்


பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்

First Published : 11 May 2011 12:32:00 AM IST


சென்னை, மே 10: இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 மதிப்பெண் வரை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
 அவர் மேலும் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வில் இந்த ஆண்டு கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியலில் 1243 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ இந்த ஆண்டு 120 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
 கட்-ஆஃப் மதிப்பெண்
 199-க்கு மேல் 1174 மாணவர்களும், 198-க்கு மேல் 2717 மாணவர்களும், 197-க்கு மேல் 4,294 மாணவர்களும், 196-க்கு மேல் 5881 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 வரை அதிகரிக்கும்.
 மே 16 முதல் விண்ணப்பம்:
 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 62 மையங்களில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்றும் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?


சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?

First Published : 11 May 2011 12:33:11 AM IST

சென்னை, மே 10: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணர்களிடையே எழுந்துள்ளது.
 பிளஸ் 2 தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 65 மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் தொடங்கி, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25-க்குள் 822 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 விளைவு என்ன? இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ள பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 512. கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 371 மாணவர்களில், 61 பேருக்கு மட்டுமே முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 310 மாணவர்களுக்கு, அவர்களது வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 வாங்கியுள்ளோருக்கு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 சென்னை மருத்துவக் கல்லூரிகள் கிடைக்குமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 200, 200-க்கு 199.75, 200-க்கு 199.50, 200-க்கு 199.25 என அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருமே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேரவே விரும்புகின்றனர். இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 இருந்தாலும்கூட, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18,131 மாணவர்களில், 7,088 பேர் (39 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.50-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்: இதைத் தொடர்ந்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இட கட்-ஆஃப் மதிப்பெண் குறித்து மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். சென்னை திருவேற்காட்டில் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் அருகே ஸ்ரீ கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசகேரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி (சென்னை) ஆகிய 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 674 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வின்போதே சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சுயநிதி கட்-ஆஃப் என்ன? அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் போன்று, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கடந்த ஆண்டைவிட 2 மதிப்பெண் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த ஆண்டு சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு வகுப்புவாரியாக உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி. (அனைத்துப் பிரிவினர்)-196.25; பி.சி. (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)-195; பி.சி. (முஸ்லிம்)-194; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)-192.50; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-185.00; தாழ்த்தப்பட்ட (அருந்ததி வகுப்பினர்)-175.50; பழங்குடி வகுப்பினர்-153.25.
 கட்டணம் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி குழு கடந்த ஆண்டு நிர்ணயித்த ஆண்டுக் கட்டண விவரம்:
 1. பி.எஸ்.ஜி., கோவை, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.5 லட்சம்; 2. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி-ரூ.2.3 லட்சம்; 3. ஸ்ரீ கற்பக விநாயகா, தாகூர், ஸ்ரீ முத்துக்குமரன், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.25 லட்சம். இந்த ஆண்டும் தொடர்ந்து நீதிபதி குழு சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்.